நெகிரி செம்பிலான் லோபாக் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதிகளில் இருந்து வரும் பலதரப்பட்ட பிரச்னைகளை களைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று லோபாக் சட்டமன்றத் தொகுதியை இரண்டாவது முறையாக தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் சியூ சேஹ் யோங் அறிவித்துள்ளார். தூய்மைக்கேடு, பராமரிப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகள் தொடர்பாக பிரச்னையை எதிர்நோக்கி வரும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்களின் நலனை கவனிப்பதற்கு செயல்பட்டு வரும் கூட்டு நிர்வாகக் குழுவினருக்கான மானிய உதவித் தொகை 5 ஆயிரம் வெள்ளியிலிருந்து 7 ஆயிரம் வெள்ளியாக அதிகரிக்கப்படுவது, தன்னார்வ அடிப்படையில் பணியாற்றி வருகின்றவர்களுக்கு அவலவன்ஸ் தொகை உட்பட இதர அனுகூலங்கள் பெற்று தருவதற்கு தாம் தொடர்ந்து போராடப் போவதாக சியூ சேஹ் யோங் அறிவித்துள்ளார். லோபாக் போன்ற அடுக்குமாடி குடியிருப்புப்பகுதிகளில் வசிக்கின்றவர்கள் பெரும்பாலும் பி40 தரப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்திக்கொள்வதற்கும் அவர்கள் தங்கியுள்ள குடியிருப்புப்பகுதிகளில் தூய்மையை பேணுவதற்கும் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சியூ சேஹ் யோங் தெரிவித்துள்ளார்.

Related News

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்


