Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அந்த நடிகர், செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த நடிகர், செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

ஷா ஆலாம், ஜூன்.14-

17 வயது பெண்ணிடம் நயமாகப் பேசி, ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் கூறப்படும் பிரபல பாடகரும், நடிகருமான ஆடவர் ஒருவர் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

அந்த பிரபலத்தை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டும்படி பிராசிகியூஷன் தரப்பிலிருந்து உத்தரவு கிடைத்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த பாடகரின் கவர்ச்சியில் உந்தப்பட்டு, அவருடன் தனது மகள் சென்றது குறித்து அந்தப் பெண்ணின் தாயார் போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து கடந்த ஜுன் 3 ஆம் தேதி அந்தப் பாடகர் கைது செய்யப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →