Mar 29, 2026
Thisaigal NewsYouTube
பூட்டப்பட்டு இருந்த வீட்டில் நபர் இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

பூட்டப்பட்டு இருந்த வீட்டில் நபர் இறந்து கிடந்தார்

Share:

ஈப்போ, மே.26-

பூட்டப்பட்டு இருந்த வீடொன்றில் நபர் ஒருவர் இறந்து கிடந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டது. கோல கங்சார், புக்கிட் சண்டன் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து போலீசாரிடமிருந்து தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரொட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

50 வயது மதிக்கத்தக்க அந்த நபர், தங்கியிருந்து வீட்டுக் கதவைத் திறக்க முடியவில்லை என்று குடும்ப உறுப்பினரிடமிருந்து போலீசார் அழைப்பை பெற்றதைத் தொடர்ந்து தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சிறப்பு சாதனனங்களைப் பயன்படுத்தி, வீட்டின் பின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, அந்த நபர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவரின் உடல், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக Sabarodzi Nor தெரிவித்தார்.

Related News