எதிர்க்கட்சி அல்லது ஆளும் கட்சி என எந்தத் தரப்பாக இருந்தாலும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தங்களின் தொகுதி மேம்பாட்டிற்கு சரி சமமான நிதி ஒதுக்கீட்டை வழங்கப்பட வேண்டும் என பெர்சே மீண்டும் வலியுறுத்தியது.
சட்டப்படி தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட வேண்டும். ஆட்சியில் இருக்கும் பிரதமரின் முடிவாக இல்லாமல் இயல்பாகவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அந்த நிதி வழங்கப்பட வேண்டும்.
அண்மையில் , பெர்சத்துவைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் அன்வாருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தங்கள் தொகுதி மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் அந்த ஆதரவு தெரிவிக்கப்பட்டதாகக் கூறினர்.
இரண்டு முக்கிய பிரச்சனைகள் இருப்பதாகக் கூறும் பெர்சே, தற்போதுள்ள கட்சித் தாவல் தடை சட்டம் பயனுள்ளதாக இல்லை எனவும் ஒதுக்கீடு எஇதியை அரசியல் ஆதரவிற்கான பேரம் பேசும் கருவியாக மாற்றப்படுகிறது என அவ்வமைப்பு தெரிவித்தது.
கட்சித் தாவல் சட்டத்தில் இருக்கும் பலவீனங்களைத் தவிர்க்க அச்சட்டம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்.
இல்லை என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனசாட்சியின்படி வாக்களிக்கும் உரிமையை அது சிதைத்துவிடும் என்றும், அதற்கு பதிலாக கட்சியின் முடிவைப் பின்பற்றவோ அல்லது பதவிகளை இழக்க நேரிடும் சூழலை அவர்கள் எத்ர்கொள்ளும் வாய்ப்பு இருப்பதை பெர்சே சுட்டிக் காட்டியது.








