Oct 16, 2026
Thisaigal NewsYouTube

எம்.பி.வி. வாகனத்தினால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எம்.பி.வி. வாகனத்தினால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

கோலாலம்பூர், நவ. 19-


கோலசிலாங்கூருக்கு அருகில் ஜாலான் கிள்ளான் – ஜாலான் தெலுக் இந்தான் சாலையின் 36 ஆவது கிலோ மீட்டரில் எம்பி.வி. வாகனத்தினால் மோதப்பட்ட வாகனமோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று இரவு 7.21 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் யமாஹா ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த 21 வயது இளைஞர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். அஸாருடின் தஜுடின் தெரிவித்தார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையில் சறுக்கி விழுந்த அந்த இளைஞர், மோட்டார் சைக்கிளுடன் எதிர்திசை வழித்தடத்தில் இழுத்துச் செல்லப்பட்டதில் அவ்வழியே வந்த எம்.பி.வி. வாகனத்தினால் மோதப்பட்டு, கடும் காயங்களுக்கு ஆளாகியதாக பூர்வாங்க புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அஸாருடின் தஜுடின் குறிப்பிட்டார்.

சவப்பரிசோதனைக்கு ஏதுவாக இளைஞரின் உடல், தஞ்சோங் காராங் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →