Sep 27, 2026
Thisaigal NewsYouTube
நீதித்துறையின் சிங்கம் இனி ஊழல் தடுப்புப் படையின் நாயகன்: பிரதமர் அன்வார் வர்ணனை
தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் சிங்கம் இனி ஊழல் தடுப்புப் படையின் நாயகன்: பிரதமர் அன்வார் வர்ணனை

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான S புதிய தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி டத்தோஸ்ரீ அப்துல் ஹாலிம் அமான், அப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்துள்ளார்.

இன்று பினாங்கு புக்கிட் மெர்தாஜமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர், நீதித்துறையில் 20 ஆண்டுகால அனுபவம் கொண்ட அப்துல் ஹலிம், அரசியல் அல்லது வணிகத் தொடர்புகள் இல்லாதவர் என்பதால் ஆணையத்தை நேர்மையாக வழிநடத்துவார் என நம்பிக்கை தெரிவித்தார். அதே வேளையில், வரும் மே 12-ல் பதவிக்காலம் முடியும் தற்போதைய தலைவர் டான்ஸ்ரீ ஆசாம் பாக்கியின் சேவையையும் பிரதமர் பாராட்டினார்.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறுகையில் SPRM புதிய தலைமை ஆணையரான அப்துல் ஹாலிம், வரும் மே 13-ம் தேதி பொறுப்பேற்கவுள்ள நிலையில், ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், ஊழலுக்கு எதிரான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவும் அவர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related News