Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஹெல்ப் பல்கலைக்கழக வெடிச் சம்பவத்தில் ஒருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

ஹெல்ப் பல்கலைக்கழக வெடிச் சம்பவத்தில் ஒருவர் மரணம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.12-

கோலாலம்பூர், புக்கிட் டாமன்சாராவில் உள்ள HELP University தனியார் பல்லைக்கழகத்தில் இன்று காலையில் நிகழ்ந்த வெடிச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒன்பது பேர் காயமுற்றனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்த 9 பேரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெடி விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது எரிவாயு கசிவு காரணமாக நிகழ்ந்ததா அல்லது ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்