Oct 16, 2026
Thisaigal NewsYouTube

துன் மகாதீர் விவகாரத்தில் எந்தவொரு அறிக்கையும் பெறவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துன் மகாதீர் விவகாரத்தில் எந்தவொரு அறிக்கையும் பெறவில்லை

கோலாலம்பூர், டிச.10-


ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பத்து பூத்தே தீவு, சிங்கப்பூரிடம் இழந்தது தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்கு எதிராக குற்றவியல் வழக்கை தொடுப்பதற்கு அரச விசாரணை ஆணையம் முன்மொழிந்துள்ள பரிந்துரை தொடர்பில் அரச மலேசியப் போலீஸ் படைஇதுவரை எந்தவொரு அறிக்கையும் பெறவில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

துன் மகாதீருக்கு எதிராக குற்றவியல் வழக்கை பதிவு செய்வதற்கு அவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யும்படி எழுவர் கொண்ட அரச விசாரணை ஆணையம் கடந்த வாரம் பரிந்துரை செய்துள்ளது.

எனினும் இவ்விவகாரம் தொடர்பில் எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதனையும் போலீஸ் படை பெறவில்லை என்று ஐஜிபி தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →