Sep 28, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

Share:

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்தாலோசிக்கவும், நெருக்கடியான சூழலில் பொதுமக்களுக்கு உதவும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காகவும், வரும் வெள்ளிக்கிழமை சிலாங்கூர் மாநில அரசு, சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

அக்கூட்டத்தில், உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவது மற்றும் மாநில தொழில்துறைக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்தப்படும் என்று மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சிறப்புக் கூட்டமானது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் நடைபெறவுள்ள மாநில மந்திரி பெசார் மற்றும் தலைமை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற உள்ளது.

மேலும், திட்டங்கள் சரியான முறையில் மற்றும் திறம்பட செயல்படுத்தப்படுவதற்காக ஒரு சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், அவை தொடர்பான கூட்டங்கள் வழக்கமாக நடைபெறும் என்றும் அமிருடின் ஷாரி தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related News