கோலாலம்பூர், ஆகஸ்ட்.11-
முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மரணம் தொடர்பான விசாரணையை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த விவகாரத்தை இனி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகமே கையாளும் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
13 வயது மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு புக்கிட் அமானைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட குழு, இந்த விவகாரத்தைக் கையாளும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் விசாரணை எவ்வித தடங்கலின்றி நிபுணத்துவ முறையில் நடைபெறுவதற்கு இடமளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் ஐஜிபி கேட்டுக் கொண்டார்.








