சிரம்பான், ஜனவரி.16-
தமது 10 வயது மகனைப் பராமரிக்கத் தவறியதுடன் அந்த சிறுவனைத் துன்புறுத்தி காயம் விளைவித்ததாக அவனது தாயாரும், அவரின் காதலரும் இன்று சிரம்பானில் இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டனர்.
வேலையில்லாத 30 வயது பெண்மணியான டாயாங் நூர்ஷிடா, நீலாய் ஜாலான் தேசா பால்மாவிலுள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2025 செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை தமது மகனைப் பராமரிக்கத் தவறியதுடன் துன்புறுத்திக் காயங்களை விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அந்தப் பெண்மணியின் குடியுரிமை குறித்து சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் அனுமதி மறுக்கப்பட்டது.
டாயாங் நூர்ஷிடாவின் காதலரான 22 வயது மஸ்ரான், கடந்த ஜனவரி 6-ஆம் தேதி அதே இடத்தில் சிறுவனைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக மற்றொரு நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அவரது கைப்பேசியில் நான்கு ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் நான்கு ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மதுபான விடுதி ஊழியரான மஸ்ரான் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.








