ஷா ஆலாம், ஆகஸ்ட்.23-
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி கால்வாயில் விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3.50 மணியளவில் சிலாங்கூர், பந்திங், ஜாலான் சுல்தான் சுலைமான் ஷா சாலையில் நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பாக அதிகாலை 3.56 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்பு, மீட்புப் படையின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட மூவர் சம்பவ இடத்திலேயே மாண்ட நிலையில் இதர மூவர் கடும் காயங்களுடன் பந்திங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் பிரத்தியேகச் சாதனங்களைப் பயன்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.








