Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பெண்ணுக்கு இடையூறு விளைவித்த இருவரை போலீஸ் தேடுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெண்ணுக்கு இடையூறு விளைவித்த இருவரை போலீஸ் தேடுகிறது

ஜோகூர் பாரு, ஜூன்.18-

துணிக் கடை ஒன்றில், வாங்கிய அடையை அணிந்து, சரி பார்ப்பதற்கு ஒப்பனை அறைக்குச் சென்ற மாது ஒருவருக்கு இடையூறு கொடுத்ததாகக் கூறப்படும் இரு நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை , ஜோகூர் பாரு, தாமான் மவுண்ட் ஆஸ்தினில் உள்ள ஒரு துணிக் கடையில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த இரு ஆடவர்கள் தேடப்பட்டு வருவதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

26 வயது பெண் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →