கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் எண்ணிக்கை போதுமானதாக இருக்கின்றதை கல்வி அமைச்சும் கல்விச் சேவை ஆணையமான எஸ்.பி.பியும் ஆக்ககரமாகச் செயல்பட்டு உறுதி செய்கிறது என அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.
தமிழ், சீனப் பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கோக்கி இருப்பதை கல்வி அமைச்சு கவனத்தில் கொள்கிறது எனக் கூறிய அமைச்சர், ஊடகங்கள் கொடுத்திருக்கும் தகவலில் தவறு இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
இந்தப் பற்றாக்குறை தற்காலிகமானதே.தொடக்கப் பள்ளிகளில் புதிய ஆசிரியர்களின் தேவையை, ஆசிரியர்களின் பணியிட மாற்றம், பணி ஓய்வு, பட்டப் படிப்பு முடித்து வெளியேறும் ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது என்றார் ஃபத்லினா.
இப்பற்றாக்குறையைச் சமாளிக்க, குறுகிய கால, நீண்டகால பணியமர்த்தம், ஒப்பந்த அடிப்படையிலான பணியமர்த்தம், Program Diploma Pascasiswazah Pendidikan போன்று முறைகள் கையாளப்படும் என்றார் அவர்.








