Oct 9, 2026
Thisaigal NewsYouTube

இரத்தக் கையிருப்பு போதுமானதாக இருக்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரத்தக் கையிருப்பு போதுமானதாக இருக்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம்

பாரோய், ஜூன்.22-

நேற்று, கொம்பேஸ், பாரோயில் நடைபெற்ற உலக இரத்த தான தின விழாவில் நெகிரி செம்பிலான் மாநிலச் ஆட்சிக்குழு உறுப்பினரும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்பரமணியம் கலந்து கொண்டு அதனைத் தொடங்கி வைத்தார். இரத்த தானம் செய்தவர்களுக்கும், இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த ஆண்டின் உலக இரத்த தான தினத்தின் மையக் கருத்து, " Give Blood, Give Hope: Together We Save Lives" என்பதாகும். இரத்த வங்கியில் போதுமான, தரமான இரத்தம் இருப்பதை உறுதிச் செய்ய, அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் இடையே ஒத்துழைப்பை பலப்படுத்த வீரப்பன் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →