Jan 24, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் போரை நிறுத்துவோம், எம்.பி. பரிந்துரை
தற்போதைய செய்திகள்

அரசியல் போரை நிறுத்துவோம், எம்.பி. பரிந்துரை

Share:

நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் மக்களின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவற்றுக்கு இடையில் அரசியல் போரை நிறுத்தி வைக்குமாறு எம்.பி. ஒருவர், இன்று நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 12 ஆவது மலேசியத் திட்டத்தின் மத்திய கால ஆய்வறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாயான் பாரு வின் பக்காத்தான் ஹராப்பான் எம்.பி.யான சிம் சே சின் இப்பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

பொருளியில் வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய திட்டங்களில் கவனம் செலுத்த முடியாமல் அரசியல் கட்சிகளுக்கு இடையில் மோதிக்கொண்டு இருந்தால் அதனால் நாட்டிற்கும், மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்று அவர் எச்சரித்தார்.

Related News