பத்து பஹாட், செப்டம்பர்.30-
ஜோகூர், பத்து பஹாட், ஜாலான் கெலுவாங் – பத்து பஹாட் சாலையில் மஸ்ஜிட் சபாக் உனி முன்புறம் ஒரு டிரெய்லர் லோரி உட்பட 7 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதர எழுவர் காயமுற்றனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் நிகழ்ந்தது. வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் டிரெய்லர் லோரி, இதர வாகனங்களை மோதித் தள்ளியதாகக் கூறப்படுகிறது.
இதில் பெரோடுவா விவா காரில் பயணித்த ஆடவர் ஒருவர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி மரணமுற்றார். லோரியின் அடியில் சிக்கிய காரிலிருந்து அந்த நபரின் உடலை மீட்பபதற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர், பாரந்தூக்கி இயந்திரத்தைப் பயன்படுத்தினர்.








