Sep 23, 2026
Thisaigal NewsYouTube
கூலிம் மாணவர் விடுதியில் தீ விபத்து; 101 மாணவர்கள் உயிர்தப்பினர்
தற்போதைய செய்திகள்

கூலிம் மாணவர் விடுதியில் தீ விபத்து; 101 மாணவர்கள் உயிர்தப்பினர்

Share:

கூலிமில் உள்ள செகோலா மெனெங்கா அகாமா தார்பியா தினியா ஆண் மாணவர் விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு தங்கியிருந்த 101 மாணவர்களும் பாதுகாப்பாக வெளியேறி உயிர்தப்பினர்.

அதிகாலை 2.47 மணியளவில் இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கூலிம் ஹை-டெக் மற்றும் தன்னார்வ தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இத்தீவிபத்தில் அந்த இரண்டு மாடிக் கட்டடத்தின் மேல்தளம் சுமார் 65 விழுக்காடு தீயில் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீயணைப்புப் படையினர் அதிகாலை 3.09 மணிக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், பாதுகாப்பு ஆய்வுகளை நிறைவு செய்து 6.25 மணியளவில் மீட்புப் பணிகளை நிறைவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News