கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-
நேற்று ஞாயிற்றுக்கிழமை வைரலான ஸ்பிரிண்ட் (SPRINT) நெடுஞ்சாலையில் ஒரு பெண் வாகனத்தில் இருந்து குதிக்கும் 14 வினாடிகள் வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லியோன் வோங் என்பவரின் முகநூல் கணக்கில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் வாகனத்திலிருந்து ஒரு பெண் குதிப்பதைக் காட்டுகிறது என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் கூ மாஷாரிமான் கூ மாஹ்மூட் கூறினார்.
அந்தப் பெண் சாலையில் விழுந்து பல வாகனங்களால் மோதப்பட்டதாக அந்தக் காணொளி சித்தரிக்கிறது. ஆனால், இது தொடர்பாக போலீசார் எந்த புகாரையும் பெறவில்லை என்று கூ மாஷாரிமான் தெரிவித்தார்.








