Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தொண்டூழியர்களுக்கு ஸ்திகேர் வெளியிடப்படும்
தற்போதைய செய்திகள்

தொண்டூழியர்களுக்கு ஸ்திகேர் வெளியிடப்படும்

Share:

வரும் ஜனவரி 25 ஆம் தேதி பினாங்கு தைப்பூச விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தண்ணீர்மலையில் கோயில்கள் வீற்றிருக்கும் பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், தைப்பூச விழா தொண்டூழீயர்கள் மற்றும் போலீஸ் துறையினர் ஆகியோரின் வாகனங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்வதற்கு ஸ்திகேர் வழங்கப்படும் என்று தண்ணீர் மலை, அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் லெ. நரேஷ் குமார் தெரிவித்தார்.

இந்த வாகனங்கள் ஆலய வளாகம் வரை செல்ல இயலாது என்ற போதிலும் ஆலயத்திற்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள குடியிருப்புப்பகுதிகளை சேர்ந்த மக்கள் உட்பட தொண்டூழியர்களுக்கு மட்டும் இந்த பிரத்தியேக ஸ்திகேர் வெளியிடப்படும் என்று நரேஷ் குமார் குறிப்பிட்டார்.

பினாங்கு தைப்பூச விழாவை முன்னிட்டு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என் ராயர், துணைத் தலைவர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன் மற்றும் இதர ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நரேஷ்குமார் இவ்விவரத்தை வெளியிட்டார். .

அதேவேளையில் இப்பகுதியில் முன்பு வசித்தவர்கள், தங்கள் வாகனங்களை வீடமைப்புப்பகுதிகளில் நிறுத்துவதற்கு இந்த ஸ்டீக்கர்களை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நரேஷ்குமார் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்