டுங்குன், டிசம்பர்.29-
வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் எம்பிவி வாகனம் ஒன்று சாலையை விட்டு விலகி,. கவிழ்ந்ததில் இருவர் மரணமுற்றனர். இதர அறுவர் படுகாயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 7.34 மணியளவில் திரெங்கானு, டுங்குன், ஜாலான் பாகா – பண்டார் அல் முக்தாஃபி பில்லா ஷா சாலையின் மூன்றாவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
ஒரு பாகிஸ்தான் ஆடவரான 21 வயது முஹமட் அஷ்ராஃப் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த 27 வயது சிராஜ் நோமான் ஆகிய இரண்டு ஆடவர்கள் சம்பவ நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர் என்று டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் மைஸூரா அப்துல் காடீர் தெரிவித்தார்.
காயமுற்ற இதர அறுவர் டுங்குன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








