மலேசிய வான் போக்குவரத்துறைக்கு புதிய வரவாக பார்க்கப்பட்ட மைஏர்லைன் விமான நிறுவனம், தனது சேவையை இன்று வியாழக்கிழமை தற்காலிமாக நிறுத்திக்கொண்டதால் 2 கோடி வெள்ளி விமான டிக்கெட் மூலம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
மைஏர்லைன் நிறுவனம் தாய்லாந்து தலைநகர் பேங்காக் உட்பட எட்டு பிரதான வழித்தடங்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் மேற்கண்ட தொகையில் டிக்கெட்டி விற்பனை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான விமான டிக்கெட்டுக்குரிய கட்டணங்களை திருப்பி தருவதாக விமான போக்குவரத்துத்துறை ஆணையமான MAVCOM மிடம் ( மாவ்கோம் ), மைஏர்லைன் உறுதி அளித்து இருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.








