Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஆட்டம் காண்கிறது சபா அரசியல் / கோத்தா கினாபாலுவிற்கு விரைந்தார் அம்னோ தலைவர்
தற்போதைய செய்திகள்

ஆட்டம் காண்கிறது சபா அரசியல் / கோத்தா கினாபாலுவிற்கு விரைந்தார் அம்னோ தலைவர்

Share:

சபா அம்னோவில் அரசியல் குளறுபடி ஏற்படத்தொடங்கியுள்ளது. நிலைமையை சரி செய்வதற்கு அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சஹிட் ஹமிடி கோத்தா கினபாலுவிற்கு விரைந்தார். சபா அம்​னோவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் விரைவில் ஓர் அறிக்கையை வெளியிடவிருப்பதாக துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் அறிவித்துள்ளார்.

சர்ச்​சைக்குரிய நபரும், லஞ்ச ஊழல் வழக்கை எதிர்நோக்கியுள்ளவரு​ம் சபா அம்னோ தலைவருமான கினா பாத்தங்ஙான் நாடாளுமன்ற உறுப்பினர் Bung Moktar Radin, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு கொண்டுள்ள GRS கூட்டணிக்கு எதிராக முன்னாள் சபா முதலமைச்சர் ஷாபி அப்டாலின் ( Shafie Abdal ) வாரிசான் கட்சியுடன் இணைந்து வரும் சபா சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக அறிவித்ததைத் தொட​ர்ந்து சபா அரசிய​ல் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.

பிரதமர் அன்வாரின் பக்காத்தான் ஹ​ராப்பானுடன் கூட்டு வைத்துள்ள சபா முதலமைச்சர் ஹஜிஜி நோர்தலைமையிலாான GRS கூட்டணியை வரும் சட்டமன்றத் தேர்தலிலல் எதிர்க்கப் போவதாக சபா அம்னோ தலைவர் Bung Moktar பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து சபா அம்னோவில் பிளவுகள் வெடித்துள்ளன.

சபா சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு அடுத்த ஆண்டு வரை கால அவகாசம் உள்ளது என்றாலும் முதலமைச்சர் ஹஜிஜி நோர் இவ்வாண்டில் சபா சட்டமன்றத் தேர்தலை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்