Oct 9, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் தலைமையாசிரியருக்கு 15 ஆண்டுச் சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் தலைமையாசிரியருக்கு 15 ஆண்டுச் சிறை

கோலத் திரங்கானு, ஜூன்.24-

16 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவருக்கு கோலத் திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 15 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது.

60 வயது ரொஸ்லி அப்துல் ரஹ்மான் என்ற அந்த முன்னாள் தலைமையாசிரியருக்கு எதிராக மொத்தம் 13 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

அந்தப் பெண்ணை மிரட்டியது, பாலியல் பலாத்காரம் புரிந்தது உட்பட பாலியல் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் அந்த முன்னாள் தலைமையாசிரியருக்கு எதிராகச் சுமத்தப்பட்டன.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை கோலத் திரங்கானு மற்றும் மாராங் ஆகிய பகுதிகளில் அந்த முன்னாள் தலைமையாசிரியர் இக்குற்றங்களைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட தலைமையாசிரியருக்கு மொத்தம் 107 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் சிறைத் தண்டனையை ஏகக் காலத்தில் அனுபவிப்பதால் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி அஸ்மான் முஸ்தஃபா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →