Jul 10, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் / மீண்டும் ஆலோசனை நடத்த பெர்சாமா வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் / மீண்டும் ஆலோசனை நடத்த பெர்சாமா வலியுறுத்து

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பிறசமய வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொண்டு, சமய அமைப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்ற தரப்புகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்த வேண்டும் என்று பெர்சாமா கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர் தலைமையிலான பெர்சமா கட்சி, அண்மையில் இந்த வழிகாட்டுதல கட்டுப்பாடுகள் குறித்த கவலையை வெளியிட்ட பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங்-இன் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளானது, அம்மாநிலத்தில் வசிக்கும் பல புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பிற சமயங்களைப் பின்பற்றுவோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பெர்சாமா குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவால், அங்கீகரிக்கப்பட்ட இந்த வழிகாட்டுதல்களில், வணிகப் பகுதிகளில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கான கட்டுப்பாடுகள், கட்டிட உயர வரம்புகள், முக்கிய சாலைகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் நிபந்தனைகள் மற்றும் 5,000 குடியிருப்பாளர்களுக்கு ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஆகியவை இடம்பெற்றுள்ளதாக பெர்சாமா தெரிவித்துள்ளது.

இந்த விதிமுறைகள் சமய சமூகங்களின் தேவைகள் மற்றும் சமய சுதந்திரத்தின் நடைமுறை அம்சங்களை பாதிக்கக்கூடும் என்பதால், அவை குறித்து மீளாய்வு செய்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விதிமுறைகள் மிகவும் உணர்வுப்பூர்வமானது என்பதால், அவை வெறும் நிர்வாக ரீதியான முடிவெடுக்கும் செயல்முறையின் மூலம் உருவாக்கப்படாமல், பரந்த அளவிலான பொதுமக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பெர்சாமா தெரிவித்துள்ளது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்