Sep 25, 2026
Thisaigal NewsYouTube
ரிங்கிட் 50 மில்லியன் செலுத்தினால் அன்றே நஜிப் வீட்டுக்காவலுக்குச் செல்ல வாய்ப்பு – ஷாபி
தற்போதைய செய்திகள்

ரிங்கிட் 50 மில்லியன் செலுத்தினால் அன்றே நஜிப் வீட்டுக்காவலுக்குச் செல்ல வாய்ப்பு – ஷாபி

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக், வீட்டுக்காவலுக்கான நிபந்தனையான 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்திய அதே நாளில் காஜாங் சிறையிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக அவரது வழக்கறிஞர் டான் ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அந்தத் தொகை செலுத்தப்பட்டால் நஜிப் அன்றே வீட்டுக்காவலுக்குச் செல்ல “நல்ல வாய்ப்பு” இருப்பதாக அவர் கூறினார்.

அக்டோபர் 14ஆம் தேதி 1எம்டிபி வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதத்தை நிறுத்தி வைக்கக் கோரும் நஜிப்பின் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அன்றைய தினம் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, 50 மில்லியன் ரிங்கிட் அபராதமும் செலுத்தப்பட்டால், நஜிப் அதே நாளில் சிறையிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக ஷாபி கூறினார்.

எனினும், அவர் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வாதம் எழலாம் என்றும் ஷாபி குறிப்பிட்டார்.

இதனிடைய நஜிப்புக்கு தேவையான 50 மில்லியன் ரிங்கிட் இன்னும் திரட்டி முடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News