Sep 25, 2026
Thisaigal NewsYouTube
நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்
தற்போதைய செய்திகள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கின் லங்காக் டூத்தா இல்லத்தைச் சுற்றி இன்று போலீஸ் பாதுகாப்பு தொடரும் நிலையில், நஜிப் எந்த நேரத்திலும் அங்கு அழைத்து வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் நிருபர்களும் புகைப்படக்காரர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அதேவேளை, நஜிப் இல்லத்தில் சிறைத்துறை அதிகாரிகள் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்கின்றனர் என்பதையும் ஊடகப் பணியாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

நஜிப்பின் இல்லத்துக்குச் செல்லும் சாலையின் முன்பகுதியில், இரு மருங்கிலும் மஞ்சள் நிற பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை முதலே இல்லத்தின் முன்பு ஊடகப் பணியாளர்கள் திரண்டிருந்த நிலையில், முன்னைய நாட்களைப் போல் அதிக எண்ணிக்கையில் அவர்கள் காணப்படவில்லை. தற்போது சுமார் 10 முதல் 15 நிருபர்களும் புகைப்படக்காரர்களுமே அங்கு இருப்பதாகக் காணப்படுகிறது.

இதனிடையே, நண்பகல் வேளையில் பல வாகனங்கள் நஜிப்பின் இல்லத்திற்குள் சென்று வெளியேறியதாகவும், அந்த வாகனங்களில் அவரது முன்னாள் பணியாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related News