Oct 12, 2026
Thisaigal NewsYouTube

கைரி ஜமாலுடினுக்கு 25 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கைரி ஜமாலுடினுக்கு 25 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவு

கோலாலம்பூர், ஏப்ரல்.18-

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடினுக்கு அவதூறு ஏற்படுத்தியதற்காக அவருக்கு 25 லட்சம் ரிங்கிட்டை இழப்பீட்டுத் தொகையாக வழங்கும்படி சமயப் போதகர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

கைரி ஜமாலுடின் சுகாதார அமைச்சராகச் சேவையாற்றி வந்த காலத்தில், கோவிட் 19 நோய் பரவல் தொடர்பிலான தடுப்பூசியின் உண்மை நிலை குறித்து அவர் பொய்யுரைத்துள்ளதாக ஒரு சமயப் போதகரான ரஷிக் அல்வி என்பவர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த சமயப் போதகருக்கு எதிராக கைரி ஜமாலுடின் அவதூறு வழக்கைத் தொடுத்து இருந்தார்.

இந்த அவதூறு வழக்கு விசாரணையில் அந்த தடுப்பூசியின் தன்மை குறித்து சுகாதார அமைச்சர் என்ற முறையில் கைரி ஜமாலுடின் பொய்யுரைக்கவில்லை என்றும், உண்மை நிலையைத்தான் விளக்கினார் என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா அஹ்மாட் மோஹ்ஸானுடின் ஷா ராஜா மோஹ்ஸான் அஹ்மாட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் கைரியின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதற்காக அவருக்கு 25 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி அந்த சமயப் போதகருக்கு நீதிபதி ராஜா அஹ்மாட் மோஹ்ஸானுடின் உத்தரவிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கோலாலம்பூரில் இரண்டாவது கூட்டு சிசிடிவி கட்டுப்பாட்டு மையம்: டிபிகேஎல், போலீஸ் துறை ஆலோசனை

கோலாலம்பூரில் இரண்டாவது கூட்டு சிசிடிவி கட்டுப்பாட்டு மையம்: டிபிகேஎல், போலீஸ் துறை ஆலோசனை

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்

புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்

சபாவில் இளைஞரைத் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்: 29 வயது சந்தேக நபர் கைது

சபாவில் இளைஞரைத் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்: 29 வயது சந்தேக நபர் கைது

டாக்ஸி, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி: அக்டோபர் 14 முதல் விநியோகம்

டாக்ஸி, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி: அக்டோபர் 14 முதல் விநியோகம்

பெர்லிஸ் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவும் 25 ரகசியப் பாதைகள் கண்டுபிடிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிஸ் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவும் 25 ரகசியப் பாதைகள் கண்டுபிடிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்