கல்வி அமைச்சின்கீழ் உள்ள பள்ளிகளில் பகடிவதை அறிகுறிகள் அதிகரித்தால், கவுன்சலிங் அல்லது ஆலோசனை ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கல்வி அமைச்சு எண்ணம் கொண்டுள்ளதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
கல்வித் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், பள்ளிகளில் ஏற்படும் இது போன்ற ஒழுக்க சீர்கேடுகளை கையாள்வதற்கான உடனடி நடவடிக்கைகளில் கவுன்சலிங் அல்லது ஆலோசனை முறையும் அடங்கும்.
"பகடிவதை செய்யும் மாணவர்கள் ஏன் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.
எனவே இந்த கவுன்சலிங் ஆசிரியர்களின் பங்கு இவ்விவகாரத்தில் முக்கியமானது என தேசியக் கூட்டணியின் கோல கெடா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அஹ்மத் ஃபக்ருதீன் ஃபக்ருராசி முன்வைத்த கூடுதல் கேள்விக்கு துணை கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் அவ்வாறு விளக்கமளித்தார்.








