குடிநுழைவுத் துறை நிர்ணயித்தபடி, இந்தோனேசிய வீட்டுப் பணியாளர் பெர்மிட் எனப்படும் பி.டி.ஏ வை புதுப்பிக்க முதலாளிகள் 610 வெள்ளி கட்டணமாகச் செலுத்த வேண்டும், லெவி கட்டணமாக, 410 வெள்ளியும், தற்காலிக சுற்றுப் பயண அனுமதிக்காக 60 வெள்ளியும், பரிசீலனைக் கட்டணமாக 125 வெள்ளியும், விசாவுக்காக 15 வெள்ளியையும் உட்படுத்தி மொத்தமாக 610 வெள்ளி செலுத்தப்பட வேண்டும் என மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
இந்தக் கட்டணத்தில் 200 வெள்ளிக்கும் மேற்போகாத சுகாதாரப் பரிசோதனைக்கான கட்டணமும் கடப்பிதழ் புதுப்பிப்புக் கட்டணமும் இணைக்கப்பட வில்லை என அவர் மேலும் சொன்னார்.
பி.டி.ஏ பணியாளர் அனுமதியை ஒவ்வோர் ஆண்டும் புதிப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை மூன்று மாதங்களுக்கு முன்னரே செய்துவிட வேண்டும் எனவும் அமைச்சர் விளக்கினார்.
அனுமதி புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை தீபகற்ப மலேசிய ஆள்பலத் துறையின்கீழ் பதிவு செய்து கொண்ட தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களின் வழி செய்து கொள்ளலாம். அதன் பரிசீலனை மூடிவு குறித்து துறையின் இணையப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் விதிக்கும் எந்த வித கூடுதல் கட்டணம் என்பது இரு தரப்பினரின் உடன்படிக்கைக்கு உள்ளானதாகும் என சிவக்குமார் மேலும் சொன்னார்.








