புத்ராஜெயா, ஆகஸ்ட்.05-
மனுதாரர்கள் வாகனமோட்டும் சோதனையில் அமராமலேயே வாகமோட்டுவதற்கான கோப்பி-ஓ லைசென்ஸ் பெற முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் போலியானது என்று சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே இன்று விளக்கம் அளித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் இந்த விளம்பரத்தின் உண்மைத் தன்மையை அறிய பலர், ஜேபிஜே அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இது விளம்பரம் தொடர்பில் புகார் அளித்துள்ளனர்.
எனினும் அந்த விளம்பரம் முழுக்க முழுக்கப் பொய்யானது என்று ஜேபிஜே இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.








