கோத்தா பாரு, பிப்ரவரி.18-
கிளந்தான் மாநில அரசு சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, ஆரம்பக் கால கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வைக் காட்டும் ஒரு நேர்மறையான அறிகுறியாகும்.
கிளந்தான் மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது அஸ்மான் யாகோப் கூறுகையில், கிளந்தானில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2012 முதல் 2016 காலப் பகுதியில் 5,888 ஆக இருந்த நிலையில், 2017 முதல் 2021 காலப் பகுதியில் அது 6,172 ஆக உயர்ந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த உயர்வு, நமது பரிசோதனை மற்றும் நோயைக் கண்டறியும் முறை மிகவும் திறம்படச் செயல்படுவதைக் காட்டுகிறது. நோயாளிகள் தாமாக முன்வந்து ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சை பெறுவதற்குத் தயாராக இருப்பதற்கும் இதுவே சான்று," என்று இன்று புதன்கிழமை Hospital Raja Perempuan Zainab II மருத்துவமனையில் நடைபெற்ற உலக புற்றுநோய் தின நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.








