May 22, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு பிகேஆர். கட்சிக்கு நூருல் தலைமையேற்பார்
தற்போதைய செய்திகள்

பினாங்கு பிகேஆர். கட்சிக்கு நூருல் தலைமையேற்பார்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியும், PKR கட்சியின் உதவித் தலைவருமான Nurul Izzah Anwar, பினாங்கு மாநில PKR கட்சிக்கு தொடர்ந்து தலைமையேற்பார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் சீரமைப்பில் பினாங்கு மாநிலத்துடன் கெடா மற்றும் பெர்லிஸ் ஆகியவற்றுக்கும் தலைமை பொறுப்பு வகித்து வந்த நூருல் இஸா, பினாங்கை தவிர மற்ற இரண்டு வட மாநிலங்களின் பொறுப்பை துறந்துள்ளார் என்று சைபுடின் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநிலத்திற்கு நூருல் இஸாவிற்கு உதவியாக துணைத்தலைவராக Mohamad Abdul Hamid நியமிக்கப்பட்டுள்ளார்.

பெர்லிஸ் மற்றும் கெடா மாநில மாநிலங்களுக்கு அவருக்கு உதவியாக இருந்த Amin Ahmad மற்றும் Nor Azrina Surip ஆகியோர் அம்மாநிலங்களின் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சைபுடின் குறிப்பிட்டார்.

Related News