Jan 19, 2026
Thisaigal NewsYouTube
அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்த மசீச முயற்சியா?
தற்போதைய செய்திகள்

அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்த மசீச முயற்சியா?

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மசீச. சதி செயலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை அக்கட்சியின் தேசியத் தலைவர், டாக்டர் வீ கா சியோங் மறுத்துள்ளார்.

இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும், இதில் உண்மை இல்லை என்றும் வீ கா சியோங் நேற்று விளக்கம் அளித்துள்ளார்.

அன்வாரின் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாமல், ஓரங்கட்டப்பட்ட கட்சியாக விளங்கும் மசீச, நடப்பு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மறைமுக வேலைகளைச் செய்து வருவதாக செய்தி தளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில், முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான வீ கா சியோங் கருத்துரைத்தார்.

அன்வாரை வீழ்த்துவதற்கு மசீச உண்மையிலேயே நோக்கம் கொண்டிருக்குமானால், அவரின் தலைமையிலான அரசாங்கத்திற்குத் தனது இரண்டு எம். பிக்களின் ஆதரவைக் கட்சி வழங்கியிருக்காது என்று வீ கா சியோங் குறிப்பிட்டார்.

Related News