ஜோகூர், கூலாய் பெசார் பகுதியில் உள்ள ரோஹிங்கியா மக்களின் குடியிருப்பில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீஸ் துறை இரண்டு விசாரணைக் கோப்புகளைத் திறந்துள்ளது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில், ஒரு வீட்டின் வேலியில் தீப்பற்றியது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், யாருக்கும் காயமோ வேறு சேதமோ ஏற்படவில்லை என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்சாட் தெரிவித்தார்.
இனவாதக் கூறுகளைக் கொண்ட காணொளிகளுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. அந்த இரண்டு காணொளிகளிலும் தனது உருவத்தை மற்றவர்கள் பயன்படுத்தியதாகக் கூறி, 30 வயதுகளில் உள்ள ரோஹிங்கியா ஆடவர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.








