புத்ராஜெயா, பிப்ரவரி.03-
ரயில்வே கேபிள் திருட்டிற்கு எதிராக வலுவான தடையை உருவாக்க, தற்போதுள்ள சட்டங்களை மறுபரிசீலனை செய்து திருத்தம் செய்ய வேண்டிய அவசரத் தேவை உள்ளது. இத்தகைய குற்றங்கள் பொது பாதுகாப்பு மற்றும் தேசிய உள்கட்டமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் எச்சரித்துள்ளார்.
சிக்னல் மற்றும் மின் கேபிள்களைத் திருடுவதால் ஏற்படும் இழப்புகள் மற்றும் ஆபத்துகளின் அளவோடு ஒப்பிடுகையில், குறைந்த அபராதம் உள்ளிட்ட தற்போதைய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
எனவே, இத்தகைய குற்றங்களுக்கு எதிராக கடுமையானச் சட்டப்பூர்வமான தடையை உறுதிச் செய்ய, சம்பந்தப்பட்ட சட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் குறித்து ஆராய வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இன்று மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையுடன் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.








