வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் கோலாலம்பூர், ஸ்தாப்பாக், ஜாலான் கெந்திங் கிளாங் ஸ்ரீ ஐயனாரீஸ்வரர் ஆலயம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ ஐயனாரீஸ்வரர் ஆலயத்தின் சமூகப் பணியாக வசதி குறைந்தவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 200 பேருக்கு அப்பொருட்கள் வழங்கப்பட்டதாக ஆலயத் தலைவர் டத்தோ பெருமாள் கூறினார்.
இது போன்று வசதி குறைந்தவர்களுக்கு உதவும் பொருட்டு ஆலயங்களும் சேவை மையங்களாக உருமாற்றம் கண்டு அதன் பங்கும் பங்களிப்பும் பரவலாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சமுதாயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஆலயங்கள் முக்கிய பங்கினை ஆற்ற இயலும். மேலும் இது போன்ற சமூகப் பணிகள் இளம் தலைமுறையினருக்கு நாம் நல்லதொரு வழிகாட்டுதலையும் உத்வேகத்தையும் வழங்க இயலும் என்றார் அவர்.
இதற்கிடையே இது போன்ற சமூக பணிகளை மேற்கொள்வதற்கு பக்கபலமாகவும் ஆதரவு வழங்கிய வங்சா மாஜூ நாடாளுமன்ற உறுப்பினர் ஸாஹிர் ஹசான், டான்ஸ்ரீ டத்தோ வின்சண்ட் தானின் சார்பில் அவரின் சிறப்பு அதிகாரி முனுசாமி ஆறுமுகம், ஃபொம்சோ அதன் தொடர்புடைய பெர்மா, பெட்டாலிங் ஜெயா இந்து அமைப்பு உட்பட இதர ஆதரவாளர்களுக்கு ஆலய நிர்வாகத்தினர் சார்பில் டத்தோ பெருமாள் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்








