Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இந்தியா வந்தவுடன் சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் வீரர்கள்! கையில் என்ன அது? பாபர் ஆஸம் வேறயா? ஷாக்
தற்போதைய செய்திகள்

இந்தியா வந்தவுடன் சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் வீரர்கள்! கையில் என்ன அது? பாபர் ஆஸம் வேறயா? ஷாக்

Share:

சென்னை: இந்தியா வந்த பாகிஸ்தான் வீரர்கள் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விவாதங்கள் ஏற்பட்டு உள்ளன.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் 50 ஓவர் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது.

பாகிஸ்தானின் முதல் போட்டி நெதர்லாந்துக்கு எதிராக அக்டோபர் 6ம் தேதி நடக்க உள்ளது. ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக ஹைதராபாத் வந்த பாகிஸ்தான் அணி அங்கே தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஹைதராபாத்தில் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் வீரராகிலும் கூட இதை பாராட்டி போஸ்ட் செய்தனர். இதற்காக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில், பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், இப்திகார் அகமது, ஆகா சல்மான், சவுத் ஷகீல், ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், ஷஹீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related News