கோலாலம்பூர், டிசம்பர்.15-
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்ட மசோதா இன்று மேலவையில் நிறைவேற்றப்பட்டது.
அதிகமான மேலவை உறுப்பினர்களின் ஆதரவுடன் இரண்டாவது நிதி அமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் மூலம் மூன்றாவது வாசிப்புக்கு விடப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மசோதா, 7 நாட்கள் விவாதங்களுக்கு பிறகு இன்று நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மேலவையில் நிறைவுரையாற்றிய அமீர் ஹம்ஸா, 2026 பட்ஜெட், மிகவும் வளமான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் பொருளியல் மீட்சிக்கான மலேசியாவை உருவாக்குவதில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் சமநிலையைத் தொடர்ந்து பராமரிப்பதாகக் குறிப்பிட்டார்.








