கோலாலம்பூர், நவம்பர்.19-
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட மூன்று முக்கிய பெரிய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கூரையில் ஏற்பட்ட விரிசல், ஜோகூர், Tanjung Pelepas துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிச் சம்பவம் மற்றும் பட்டர்வொர்த் ரயில் நிலையத்தில் கொமுட்டர் ரயில் தரம் புரண்ட சம்பவம் ஆகிய மூன்று சம்பவங்கள் குறித்து விசாரணை செய்யப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
சுயேட்சைக் குழு மூலம் நடைபெறும் இந்த விசாரணைகள் யாவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்று அந்தோணி லோக் உறுதி அளித்தார்.








