Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கார் களவாடப்பட்டது, போலீசார் விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார் களவாடப்பட்டது, போலீசார் விசாரணை

ஈப்போ , செப்டம்பர்

இன்று திங்கட்கிழமை சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் Toyota Alphard வாகனம் களவாடப்பட்டது தொடர்பிலான காணொளியைத் தொடர்ந்து அந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிதீன் அபாங் அஹ்மத் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.19 மணியளவில் ஜெலபாங்- கில் ஆடவர் ஒருவரிடமிருந்து போலீசார் புகார் ஒன்றை பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

புகார் செய்தவர் உள்ளூரைச் சேர்ந்தவர் ஆவார். வீட்டின் முன்நிறுத்தப்பட்ட அந்த MPV வாகனத்தை, அவரின் கண்முன்னாலேயே, ஆடவர் ஒருவர் களவாடிக்கொண்டு தப்பிக்கும் காட்சி, ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளதாக ஏசிபி அபாங் ஜைனல் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →