Oct 18, 2026
Thisaigal NewsYouTube

தீவிரவாத கூறுகளை கையாளும் ஆற்றல் போலீஸ் படைக்கு உண்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீவிரவாத கூறுகளை கையாளும் ஆற்றல் போலீஸ் படைக்கு உண்டு

புத்ராஜெயா,செப்டம்பர் 03-

நாட்டில் இன்னமும் நிலவி வரும் சில தீவிரவாத கூறுகளை கையாளும் ஆற்றலை அரச மலேசிய போலீஸ் படை கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடுன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத கூறுகளை கொண்ட நடவடிக்கைகள், அதிகரித்துக்கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்பட்ட போதிலும் அவற்றை முழு வீச்சில் வேரறுக்கவும், துடைத்தொழிக்கவும் போதுமான ஆற்றலை போலீஸ் படை கொண்டு இருப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும், அவை போலீஸ் கடையின் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் உள்ளன.. அவற்றை சமாளிக்கும் ஆற்றலையும், திறனையும் போலீஸ் படை கொண்டுள்ளது என்பதற்கு தாம் உத்தரவாதம் அளிப்பதாக சைஃபுடுன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →