Oct 16, 2026
Thisaigal NewsYouTube

500 ரிங்கிட் கேட்டு மிரட்டிய ஆசாமி கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
500 ரிங்கிட் கேட்டு மிரட்டிய ஆசாமி கைது

கோலாலம்பூர், டிச. 13-


கோலாலம்பூர் செந்தூல் பசார் வட்டாரத்தில் ஓர் உணவகத்தை அடித்து நொறுக்கப்போவதாக கூறி, 500 வெள்ளி கேட்டு மிரட்டிய ஆசாமி ஒருவரை போலீசார் கைது செய்தது.

இச்சம்பவத்தினால் மிகுந்த அச்சத்திற்கு ஆளான உணவக உரிமையாளர் செய்து கொண்ட புகாரைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி 25 வயதுடைய நபரை போலீசார் கைது செய்து இருப்பதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமட் சுகர்னோ முகமட் ஸஹாரி தெரிவித்தார்.

பிடிபட்ட நபர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே 15 குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →