Aug 12, 2026
Thisaigal NewsYouTube
சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது

Share:

சுங்கை பட்டாணி, மே.25-

கெடா, கோலா மூடா மாவட்டக் காவல் துறை தலைமையகம், போதைப்பொருள் நடவடிக்கைகளை ஒழிக்க ஆல் பிளேக் மிலிட்டன் ஜிஹாட் டாடா என்ற சிறப்புப் படையை உருவாக்கியுள்ளது. இந்த 25 பேர் கொண்ட சிறப்புப் படை, போதைப்பொருள் தொடர்பான தகவல்களைப் பெற, பல்பொருள் அங்காடிகளுக்கும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கும் சென்று செயல்படும் என்று கோலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

பொதுமக்கள் இந்த சிறப்புப் படையுடன் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளலாம், அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என ஹன்யான் ரம்லான் மேலும் சொன்னார்.

Related News

சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது | Thisaigal News