Apr 11, 2026
Thisaigal NewsYouTube
பத்துகேவ்ஸ்  சிறார் இல்லத்தில்  பாலியல் வன்கொடுமை: சட்ட அம்சங்களை ஆராய்கிறது மகளிர் அமைச்சு
தற்போதைய செய்திகள்

பத்துகேவ்ஸ் சிறார் இல்லத்தில் பாலியல் வன்கொடுமை: சட்ட அம்சங்களை ஆராய்கிறது மகளிர் அமைச்சு

Share:

பத்துகேவ்ஸ், தாமான் செலாயாங் பெர்மாத்தாவில் உள்ள சிறார் பராமரிப்பு இல்லத்தில் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கின் சட்ட அம்சங்கள் தீர்ப்பு மற்றும் அதன் பின்னணிக் காரணங்களை மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இல்லத்தின் பராமரிப்பாளரான 25 ரத்ன வேலு மற்றும் சிறார் இல்லத்தின் உரிமையாளரான 31 வயது எஸ். வேலன் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி, சட்ட ரீதியான காரணங்களை முழுமையாகப் புரிந்துகொண்ட பின்னரே அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம் இது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

எட்டு முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு எதிராக 15-க்கும் மேற்பட்ட பாலியல் அத்துமீறல்களைச் செய்ததாக ரத்ன வேலு மற்றும் வேலன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதில் ரத்னவேலு குற்றத்தை ஒப்புக்கொண்டார். வேலன், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் தீவிரமானவை என்றும், பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு அதிருப்தி அடைந்தால் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமுண்டு என்றும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

Related News

பாலஸ்தீனத்தில் 34 சட்டவிரோத குடியேற்றங்கள்: இஸ்ரேலுக்கு மலேசியா கடும் கண்டனம்

பாலஸ்தீனத்தில் 34 சட்டவிரோத குடியேற்றங்கள்: இஸ்ரேலுக்கு மலேசியா கடும் கண்டனம்

உலகளாவிய எரிபொருள்  நெருக்கடிக்கு மத்தியிலும் வீட்டுவசதித் திட்டங்கள் திட்டமிட்டபடி முடியும் - அமைச்சர் ஙா கோர் மிங் உறுதி

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் வீட்டுவசதித் திட்டங்கள் திட்டமிட்டபடி முடியும் - அமைச்சர் ஙா கோர் மிங் உறுதி

போலீஸ் தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

போலீஸ் தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

எல்டிபி (LDP) நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் மோதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டி பலத்த காயம்

எல்டிபி (LDP) நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் மோதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டி பலத்த காயம்

சிங்கப்பூரில் கழிவறை சுத்தம் செய்ய 13,000 ரிங்கிட் சம்பளம்! - பட்டப்படிப்பு கட்டாயம் என்பதால் நெட்டிசன்கள் வியப்பு

சிங்கப்பூரில் கழிவறை சுத்தம் செய்ய 13,000 ரிங்கிட் சம்பளம்! - பட்டப்படிப்பு கட்டாயம் என்பதால் நெட்டிசன்கள் வியப்பு

எரிபொருள் கடத்தலைத் தடுக்க எல்லையோர எரிபொருள் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு

எரிபொருள் கடத்தலைத் தடுக்க எல்லையோர எரிபொருள் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு