Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கிறிஸ்துமஸ் டோல் கட்டண தள்ளுபடி, வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

கிறிஸ்துமஸ் டோல் கட்டண தள்ளுபடி, வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்

Share:

வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாகனங்களுக்கான டோல் கட்டண தள்ளுபடி குறித்து அரசாங்கம் வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கவிருக்கிறது என்று போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று டோல் கட்டணத்திற்கு விலக்களிப்பு வழங்குவதா ? இல்லையா ? என்பது குறித்து அரசாங்கம் அறிவிப்பை வெளியிடும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM மின் அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அஹ்மாட் மஸ்லான் இதனை குறிப்பிட்டார்.

Related News