Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஒரு ரிங்கிட் கட்டணத்தை இரத்து செய்ய வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒரு ரிங்கிட் கட்டணத்தை இரத்து செய்ய வேண்டும்

டிச.6-

பிற வங்கிகளின் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்தில் பணம் எடுக்கும் போது விதிக்கப்படும் ஒரு ரிங்கிட் கட்டணத்தை இரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது MTUC எனப்படும் மலேசிய தொழிலாளர் காங்கிரஸ்.

குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள தொழிலாளர்கள், இந்த கட்டணத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என MTUC குறிப்பிட்டது. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இந்க்த கட்டணம் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போதும் இந்த கட்டணத்தை இரத்து செய்வது பொருத்தமானது என்று MTUC கூறுகிறது.

இந்தக் கட்டணத்தை இரத்து செய்வதன் மூலம், வங்கிகள் தங்கள் சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதாக அறியப்படும். என்வே, MTUC, இந்தக் கட்டணத்தை இரத்து செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்டப் பிரிவினருக்கு இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று MTUC வலியுறுத்துகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →