Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சொத்து விவரங்களை அறிவிப்பதில் பிரச்னை இல்லை
தற்போதைய செய்திகள்

சொத்து விவரங்களை அறிவிப்பதில் பிரச்னை இல்லை

Share:

துன் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நாட்டின் துணைப் பிரதமராக தாம் பொறுப்பு வகித்து காலத்தில், சம்பாதித்த சொத்து விவரங்களை அம்பலப்படுத்துவதில், தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

அண்மையில் சொத்து விவரங்களை பகிரங்கமாக அறிவித்த தனி நபர்களில் தாமும் ஒருவர் என்றும், இது தம்முடைய வெளிப்படையான போக்கை மக்களிடம் நிரூபிப்பதாக உள்ளது என்றும் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் குறிப்பிட்டார்.

துன் மகாதீரைப் போல் தாம் அல்ல என்று குறிப்பிட்ட அன்வார், செகாம்பூட் இல் உள்ள தம்முடைய வீட்டின் விலை ஒரு கோடியே 10 லட்சம் வெள்ளி என்பதை அண்மையில் தாம் வெளிப்படையாக அறிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதில் ரகசியம் காக்க ஒன்றும் இல்லை. பொது மக்கள் அறிந்த ஒன்றுதான் என்று கோலாலம்பூர், டத்தாரான் மெர்டேக்கா வில் மடானி மலேசியா நிகழ்வில் கலந்துகொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News