பெட்டாலிங் ஜெயா, ஜூன்.01-
சிலாங்கூர், ரவாங் ஏகோ பூங்காவில் உள்ள நீர்வீழ்ச்சியில் இன்று காலை தவறி விழுந்த வங்காளதேச ஆடவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்தில் அவருக்கு தலை, இடுப்பு, முதுகு மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் உதவி செயல்பாட்டு இயக்குனர் அகமது முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், பாதிக்கப்பட்ட நபரை நீர்வீழ்ச்சிப் பகுதியில் இருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக சுகாதார அமைச்சு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.








