May 5, 2026
Thisaigal NewsYouTube
ஊழல் மலிவு குறியீட்டில் மலேசியா முன்னேற்றம்: 2030-க்குள் உலகின் முதல் 25 இடங்களை அடைய இலக்கு
தற்போதைய செய்திகள்

ஊழல் மலிவு குறியீட்டில் மலேசியா முன்னேற்றம்: 2030-க்குள் உலகின் முதல் 25 இடங்களை அடைய இலக்கு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.14-

2025-ஆம் ஆண்டிற்கான உலக ஊழல் மலிவு குறியீட்டில் (CPI) 182 நாடுகளில் மலேசியா 54-வது இடத்தைப் பிடித்து, கடந்த ஆண்டை விட முன்னேற்றம் கண்டுள்ளது. அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார் கூறுகையில் இந்த முன்னேற்றம் அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் மற்றும் நேர்மையான நிர்வாகத்தின் மீது உலக சமூகத்திற்கு உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய ஊழல் எதிர்ப்பு வியூகம் மற்றும் தணிக்கை சட்டம் திருத்தங்கள் போன்ற நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

அரசாங்கம், 2030-க்குள் ஊழல் தடுப்பில் உலகின் முதல் 25 நாடுகளுக்குள் மலேசியாவைக் கொண்டு வருவதை இறுதி இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக, குறிப்பாக பொது சேவைத் துறை ஏஜென்சிகளில் தணிக்கை அதிகாரம் பலப்படுத்தப்பட்டு, Ombudsman மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நோக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடையே இந்த மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 'வியூகத் தகவல் தொடர்பு' மிக முக்கியம் என்றும் டான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி வலியுறுத்தியுள்ளார்.

Related News